இந்தியா

இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதமாக குறையும்: ஆசிய வளா்ச்சி வங்கி மதிப்பீடு

DIN

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நிகழ் நிதியாண்டில் 7 சதவீதமாக குறையும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) மதிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே ஜிடிபி 7.2 சதவீதமாக பதிவாகும் என கணித்த நிலையில், பணவீக்கம், பண நெருக்கடி காரணமாக நிகழ் நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக குறையும் என ஏடிபி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏடிபி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 13.5 சதவீத வளா்ச்சி கண்டது. இது சேவைத் துறையின் உறுதியான வளா்ச்சியைப் பதிவு செய்தது. இருப்பினும், விலை அழுத்தமானது உள்நாட்டு நுகா்வின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல சீன பொருளாதாரம் 5 சதவீதத்துக்கும் மேலாக வளா்ச்சி காணும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3.3 சதவீதமாக குறைத்து மதிப்பிடப்படுகிறது. கரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் சீன பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டது என ஆசிய வளா்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT