முகப்பு
இந்தியா

குஜராத்தில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்கிறார் ஜே.பி. நட்டா! 

பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் குஜராத் மாநில பாஜக மூத்த தலைவர்களை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
கோப்புப்படம்
பகிர்:

அகமதாபாத்: பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் குஜராத் மாநில பாஜக மூத்த தலைவர்களை புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை குஜராத் சென்றார். 

அவர், புதன்கிழமை காந்திநகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான ஸ்ரீ கமலாயத்தில் குஜராத் மாநில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, ராஜ்கோட்டில் குஜராத் மாநில ஊரக, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக பிரதிநிதிகளின் கூட்டத்தில் நட்டா உரையாற்றினார். 

அப்போது, மாநிலத்தில் உள்ள கட்சித் தொண்டர்கள் வரவிருக்கும் பேரவைத் தேர்தலைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், தங்கள் கட்சிக்கு மட்டுமே பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நட்டா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.