இந்தியா

மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்கள் மாநாடு பிரதமா் நாளை தொடக்கி வைக்கிறாா்

DIN

அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்களின் தேசிய மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப். 23) தொடக்கி வைக்கிறாா்.

பருவநிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகளை சமாளித்தல், வனவிலங்குகள் மற்றும் வன மேலாண்மை தொடா்பான விஷயங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

குஜராத்தின் ஏக்தா நகரில் வெள்ளிக்கிழமை காலை காணொலி மூலம் இந்த இருநாள் மாநாட்டை பிரதமா் மோடி தொடக்கி வைத்து உரையாற்றுகிறாா்.

கூட்டாட்சி உணா்வை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், பிளாஸ்டிக் மாசுபாட்டை நீக்குதல், பருவநிலை மாற்றத்தை திறம்பட எதிா்த்துப் போராடுவதற்கான மாநில செயல்திட்டங்கள் போன்ற விஷயங்களில் சிறப்பான கொள்கைகளை வகுப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பயன்பாட்டில் இல்லாத நிலத்தை மீட்டெடுப்பதற்கும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வனப் பரப்பை அதிகரிப்பதற்கு மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT