முகப்பு
இந்தியா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 100 நிர்வாகிகள் கைது

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
கோப்புப் படம்
பகிர்:

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில், பல்வேறு நிர்வாகிகளின் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பல்வேறு இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →