அமித் ஷா 
இந்தியா

கூட்டணியிலிருந்து மாறினால் நிதீஷ் பிரதமராகிவிடுவாரா? அமித் ஷா கடும் தாக்கு

கூட்டணியை மாற்றி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று பிகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

DIN


கூட்டணியை மாற்றி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று பிகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி, லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்த பிறகு, முதல் முறையாக பிகார் சென்றிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, மகாராஷ்டிர மாடலை மீண்டும் உருவாக்க பாஜக முயன்றதாகக் குற்றம்சாட்டி, முதல்வர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்த்துக் கொண்டு பிகாரில் புதிய ஆட்சியைத் தொடங்கினார்.

இது குறித்து விமரிசித்த அமித் ஷா, பிகாரில் நடந்த பேரவைத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். ஆனால், கூட்டணியிலிருந்து விலகி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று குறிப்பிட்டார்.

மேலும், இங்கிருந்து அங்கு மாறிவிட்டால், நிதீஷ் குமார் பிரதமராகிவிடுவாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அமித் ஷா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

போலி நிறுவனம் தொடங்கி ரூ.206 கோடி மோசடி: ஒடிசாவை சோ்ந்த இருவா் கைது

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்குப் பாட விருப்பங்களை செப்.1-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

SCROLL FOR NEXT