இந்தியா

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் இந்தியா முன்னேறும்: ராகுல்

DIN

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இந்தியா முன்னேறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட சுட்டுரை பதிவில், 

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மற்றும் உத்தரகண்ட் மாநிலம் பௌரி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. 

உத்தரகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் பெண் வரவேற்பாளரைக் கொன்றதாக பாஜக தலைவரின் மகனும் அவருக்குச் சொந்தமான விடுதியில் 2 ஊழியர்களும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும், மொராதாபாத்தில் சாலையில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்வத்தைக் கண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்த, 15 வினாடிகளில் சிசிடிவி காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்தன. 

மொராதாபாத் மற்றும் உத்தரகண்ட்டில் பெண்களுக்கு நிகழ்ந்த சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன என்று இந்தியில் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

பாரத் ஜோடோ யாத்திரையில், நான் பல திறமையான மற்றும் இளம் பெண்களைச் சந்தித்து கருத்துக் கேட்கிறேன். ஒரு விஷயம் தெளிவாகிறது, நாட்டின் பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நமது இந்தியா முன்னேறும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT