இந்தியா

ராகுல் காந்தி இன்று மீண்டும் நடைப்பயணத்தை தொடங்கினார்!

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது முறையாக ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் சனிக்கிழமை காலை கேரள மாநிலம், பெரும்பாரா சந்திப்பில் இருந்து தனது 16 ஆவது நாள் நடைப்பயணத்தை  மேற்கொண்டு வருகிறார்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பெரும்பாரா சந்திப்பு பகுதியிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடைப்பயணத்தை தொடர்ந்தார்.

ராகுல் காந்தி நடைப்பயணம் பகல் 10 மணி தோபே ஸ்டேடியம் சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த கட்சியனர் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். 

கேரளம் மாநிலத்தில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய ராகுல் நடைப்பயணம் வரும் 29 ஆம் தேதி முடிவடைகிறது.
 
மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் நடைப்பயணம் கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபெறுகிறது. இதில் 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT