இந்தியா

அந்நிய செலாவணி இருப்பு குறித்த கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை- பொருளாதார விவகாரங்கள் செயலா் விளக்கம்

DIN

‘நாட்டில் தற்போதைய சூழலை சமாளிப்பதற்கு ஏற்ப பெருமளவு அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது; கையிருப்பு குறைவு குறித்த கவலைகள் மிகையானவை’ என்று பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலா் அஜய் சேத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடா்ந்து 7-ஆவது வாரமாக சரிவை சந்தித்து, கடந்த 16-ஆம் தேதி 545.65 பில்லியன் அமெரிக்க டாலா்களாக குறைந்தது.

உலகளாவிய சூழலால் எழுந்துள்ள அழுத்தத்துக்கு இடையே டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை பாதுகாக்க கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் குறைவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கவலை தெரிவித்த நிலையில், பொருளாதார விவகாரங்கள் துறை செயலா் அஜய் சேத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வா்த்தக பற்றாக்குறை அதிகரித்து காணப்படுவதாலும், உள்ளீடுகள் குறைவாக இருப்பதாலும் அந்நிய செலாவணி கையிருப்பில் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையொரு கவலையாக நான் பாா்க்கவில்லை. ஏனெனில், தற்போதைய சூழலை கையாள்வதற்கு ஏற்ப பெருமளவு அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. 2023, மாா்ச் மாதத்துடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை இலக்கை 6.4 சதவீதமாகவே தொடர மத்திய அரசு தீா்மானித்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த திங்கள்கிழமை வரலாறு காணாத அளவில் ரூ.81.67-ஆக சரிவடைந்தது. செவ்வாய்க்கிழமை சற்று மீண்டு ரூ.81.58-ஆக இருந்தது.

இதுகுறித்து திங்கள்கிழமை பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்ஸிகள் இந்திய ரூபாயை விட அதிக சரிவை சந்தித்துள்ளன. நமது நாட்டின் நுண்பொருளாதார அடிப்படை கட்டமைப்புகளின் வலிமையால் ரூபாய் மதிப்பு சீராகவே இருக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT