இந்தியா

ஒடிசாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!

DIN

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் நடந்த சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான 1 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், ஒடிசா குற்றப்பிரிவின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) குழுவினர் சுந்தர்பாதா-ஜட்னி சாலையில் சோதனை நடத்தியதில், போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து 1050 கிராம் எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக புவனேஸ்வரைச் சேர்ந்த உமேஷ் பெஹரா என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அவர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான சிறப்பு இயக்கத்தை பணிக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 2020 முதல், சிறப்பு அதிரடிப்படை 58 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள், 202 கிராம் கோகோயின் மற்றும் 111 குவின்டலுக்கும் அதிகமான கஞ்சா, 750 கிராம் ஓபியம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது. மேலும் 159 போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு கண்டெடுப்பு

வெப்ப அயா்ச்சி, ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

ஆற்காடு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பந்தக்கால்

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

SCROLL FOR NEXT