இந்தியா

முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் செளஹான் நியமனம்

DIN


முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் அனில் செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நாட்டின் ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் அனில் செளஹான் பொறுப்பு வகிப்பார் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 

இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தளபதியாக இருந்த அனுபவம் கொண்ட அனில் செளஹான், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பதற்றமான சூழல்களில் திறம்பட பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி  லெப்டினென்ட் ஜெனரலாக அனில் செளஹான் ஓய்வு பெற்றவர்.

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் நீலகிரியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது புதிய தலைமை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT