இந்தியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைப்பு: அப்துல் சத்தார்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார். 

DIN


பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அல்துல் சத்தார் அறிவித்துள்ளார். 

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 

பல்வேறு இடங்களில் மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டனர்.

இந்த சோதனைகளில் முடிவில் தமிழகம், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 350க்கும் அதிகமான  பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் நச்சுப்புகை! மிகவும் மோசமான நிலையில் நீடிக்கும் காற்று மாசு!

யுனிசெஃப் குழந்தைகள்நல தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம்!

ஜம்மு-காஷ்மீரில் கார்-லாரி மோதல்: 4 பேர் பலி

3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் அகண்டா - 2!

“சிறிய படத்திற்கு மக்களை வரவைப்பதே கஷ்டமாக இருக்கிறது” மிடில் கிளாஸ் படக்குழுவினர் பேட்டி!

SCROLL FOR NEXT