வடமேற்கு தில்லியின் கஞ்சவாலா பகுதியில் எரிந்த காருக்குள் கருகிய நிலையிலிருந்த சடலம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர்.
காவல்துறை துணை ஆணையர் (ரோகிணி) பிரணவ் தயல் கூறுகையில்,
மீட்கப்பட்ட சடலம் முற்றிலும் கருகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது.
கஞ்சவாலாவில் கார் எரிவது தொடர்பாக இன்று காலை 6.40 மணியளவில் அழைப்பு வந்தது. அந்த இடத்தை அடைந்தபோது, மஜ்ரா தபாஸில் இருந்து உயர்நீதிமன்றம் செல்லும் வழியில் கார் கண்டுபிடிக்கப்பட்டது.
உடலும், காரும் முற்றிலுமாக எரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்டக் குற்றப்பிரிவு குழு மற்றும் தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். சம்பவத்தின் பின்னணியை அறிய, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இறந்தவரை அடையாளம் காணும் முயற்சியும் நடைபெற்று வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.