இந்தியா

குஜராத் இணைப் பொறுப்பாளர் ராகவ் சதா கைது செய்யப்படலாம்: கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ராகவ் சதா, குஜராத்தில் அரசியல் விவகாரங்களுக்கான கட்சியின் இணைப் பொறுப்பாளர் கைது செய்யப்படலாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

DIN


ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ராகவ் சதா, குஜராத்தில் அரசியல் விவகாரங்களுக்கான கட்சியின் இணைப் பொறுப்பாளர் கைது செய்யப்படலாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

சதாவை கைது செய்வதாகக் கூறப்படும் திட்டத்தில் எந்த நிறுவனம் செயல்படுகிறது மற்றும் என்ன குற்றச்சாட்டுகளின் கீழ் செயல்படுகிறது என்பதை கேஜரிவால் குறிப்பிடப்படவில்லை. 

இந்தாண்டின் தொடக்கத்தில் பஞ்சாபில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பெருமைக்குரிய மாநிலங்களவை எம்.பி.சதா, சமீபத்தில் கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

குஜராத் மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராக ராகவ் சதா நியமிக்கப்பட்டு, அவர் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து, அவர் கைது செய்யப்படுவார் என்று செவிவழி செய்திகள் வெளியாகின்றன என்று இந்தியில் பதிவிட்டுள்ளார். 

தில்லி கலால் கொள்ளை ஊழல் தொடர்பாகக் கட்சியின் ஊடக தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் செவ்வாய்க்கிழமை சிபிஐ கைது செய்ததையடுத்து, கேஜரிவால் இதைத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT