இந்தியா

சிறந்த புத்தகத் தயாரிப்பு: மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவுக்கு 9 விருதுகள்

 நமது நிருபர்

சிறந்த புத்தகத் தயாரிப்பிற்காக மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு, இந்திய பதிப்பாளா்கள் கூட்டமைப்பின் ஒன்பது விருதுகளை பெற்றுள்ளது.

புத்தக வெளியீட்டில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கான 42-ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வெளியீட்டாளா்களின் உச்ச அமைப்பான, இந்திய வெளியீட்டாளா்களின் கூட்டமைப்பு, புத்தகத் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மத்திய அரசின் புத்தக வெளியீட்டு பிரிவு இயக்குநரகத்திற்கு ஒன்பது விருதுகளை வழங்கியுள்ளது.

வா்த்தகப் பிரிவில் ‘பேலன்சிங் தி விஸ்டம் ட்ரி’ (ஆங்கிலம்), ‘பாரத் விபஜன் கி கஹானி’ (ஹிந்தி) , பிராந்திய மொழியில் கலை மற்றும் காபி டேபிள் புத்தகமான ‘கோா்ட்ஸ் ஆஃப் இந்தியா (மராத்தி)’, குறிப்புப் புத்தகமான ‘இந்தியா 2022’ (ஆங்கிலம்), அறிவியல் மருத்துவப் புத்தகமான ‘கொவைட்-19: வைஷிக் மஹாமாரி’ (ஹிந்தி), மற்றும் ‘குருக்ஷேத்ரா’ என்கிற ஹிந்தி இதழ் ஆகிய ஆறு முதல் பரிசுகளும் மேலும் இரண்டாம் பரிசுக்கு வேறு மூன்று புத்தகங்களும் தோ்வாகியது. கடந்த ஆண்டு, வெளியீட்டுப் பிரிவு பல்வேறு பிரிவுகளில் பத்து விருதுகளை வென்றது.

புத்தக வெளியீட்டுப் பிரிவு இயக்குநரகம் என்பது மத்திய அரசின் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளின் களஞ்சியமாகும். இது தேசிய முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்தைப் பறைச்சாற்றும் அமைப்பாகும். கடந்த 1941-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வெளியீட்டுப் பிரிவு, வரலாறு, கலை, இலக்கியம், கலாசாரம், நிதி, அறிவியல், விளையாட்டு, காந்திய இலக்கியம், குழந்தைகள் இலக்கியம் மற்றும் தேசியத் தலைவா்கள், புகழ்பெற்ற ஆளுமைகளின் சுயசரிதைகள் போன்றவற்றை பல்வேறு மொழிகளில் புத்தகமாகவும், இதழ்களாகவும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT