இந்தியா

காங். தலைவர் தேர்தல்: சசி தரூர் வேட்புமனுத் தாக்கல்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். 

DIN

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். 

கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்(செப். 30) முடிவடைகிறது. 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் முதல்வர், அந்த மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தினால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

அதுபோல மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு தெரிவித்து திக்விஜய் சிங்கும் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

அதுபோல ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி என்பவரும் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

அறக்கட்டளைச் சொற்பொழிவு

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT