இந்தியா

கங்கனாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ‘எமர்ஜென்சி’ படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்குமா?

DIN

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது அடுத்த படமான எமெர்ஜென்சிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மக்களவைச் செயலகத்துக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: எனது திரைப்படம் எமர்ஜென்சிக்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் சில காட்சிகளைப் படமாக்குவதற்கு நாடாளுமன்ற வளாகத்த்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் தனியார் சார்ந்த நிறுவனங்கள் படப்பிடிப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அரசு சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே நாடாளுமன்ற வளாகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் தூர்தர்ஷன் மற்றும் நாடாளுமன்ற சன்சாத் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் சார்ந்த யாரையும் வளாகத்தின் உள்ளே படப்பிடிப்புக்கு அனுமதிப்பதில்லை.

எமர்ஜென்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை கங்கனா ரணாவத் தயாரித்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாப்பாத்திரத்தினை அவர் ஏற்று நடிக்கிறார். 

இந்த திரைப்படம் குறித்து கங்கனா ரணாவத் கூறியிருந்ததாவது: எமர்ஜென்சி இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டம். இந்தக் காலக்கட்டத்தில் அதிகாரம் குறித்த நமது பார்வை வித்தியாசமாக இருந்திருக்கும். அதன் காரணத்தினாலேயே இதனை படமாக்க முடிவு செய்தேன் என்றார்.

1975 ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். இந்த அவசரநிலை ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை அமலில் இருந்தது. இந்த 21 மாத காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. அவசரநிலை நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: முட்டை நகரில் முக்கோணப் போட்டி!

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

பாயும் ஒளி நீ எனக்கு...

மகாபாரதத்தில் தெய்வீக மாதர்கள்

SCROLL FOR NEXT