முகப்பு
இந்தியா

தில்லி: கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 84% பேருக்கு ஒமைக்ரான்

தில்லியில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
பகிர்:

தில்லியில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா நாடு முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. தில்லியில் 351 பேர் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையான கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் சத்யேந்திர ஜெயின் பேசுகையில்,

Advertisement

தில்லியில் கடந்த இரண்டு நாள்களாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 84 சதவீதம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 4,000 பேர் வரை கரோனா உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொற்று உறுதியாகும் விகிதம் 6.5 சதவீதமாக அதிகரிக்கக்கூடும். தற்போது 202 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,700 பேருக்கு ஒமைக்ரான் வகை கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments