முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கரோனா: 893 பேர் பலி

​இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,281 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,281 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 14.50 சதவிகிதம்.

மேலும் 893 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 3,52,784 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,87,13,494 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,94,091 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 18,84,937 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

மேலும் 62,22,682 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,65,70,60,692 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.