அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார்: மோடி
நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாஅனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார்: மோடி
நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. நாளை காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மோடி பேசியதாவது:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்கிறேன். தற்போது உலகளவில் இந்தியாவிற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.
இந்த கூட்டத்தொடர் நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம், உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு குறித்து உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவுள்ளன.
மத்திய நிதிநிலை அறிக்கை உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து உறுப்பினர்களும் திறந்த மனதுடன் தரமான விவாதங்களை நடத்தி விரிவான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன். விவாதங்களுக்கு மத்திய அரசும் தயாராக உள்ளது.
முழு ஆண்டிற்கான பட்ஜெட் என்பதால், இந்த அமர்வை பயனுள்ளதாக மாற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.