குடியரசுத் தலைவர் தேர்தல்: 3 ஆம் சுற்று முடிவில் திரெளபதி முர்மு முன்னிலை
குடியரசுத் தலைவர் தேர்தல் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு முன்னிலை வகித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு முன்னிலை வகித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு சுற்றுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
மூன்றாவது சுற்றில் கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்: 2ஆம் சுற்றிலும் திரௌபதி முர்மு முன்னிலை
ஏற்கெனவே இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் இருந்த நிலையில் மூன்றாம் சுற்று முடிவில், திரௌபதி முர்மு 812 வாக்குகளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ 521 வாக்குகள் பெற்றுள்ளனர்.
அதில் திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 577,777 என்றும், யஷ்வந்த் சின்ஹ பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062 என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
ட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படுகிறது. மூன்று கட்டங்களிலும் திரெளபதி முர்மு முன்னிலை வகித்துவரும் நிலையில் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.