முகப்பு
இந்தியா

சீனாவில் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

சீனாவின் சாங்ஷா நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

சீனாவின் சாங்ஷா நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று சாங்ஷாவில் உள்ள வாங்செங் மாவட்டத்தில் ஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. 

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 10 பேரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

முன்னாதக, இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது, தற்போது, பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து 53 ஆக உயர்ந்துள்ளது. 

சீன அதிகாரிகளின் கூற்றுப்படி, 

கட்டடம் எந்த அங்கீகாரமும் இல்லாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது விபத்துக்கு முக்கிய காரணமாகும். 

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர், அவர்களில்  4 பேர் குற்றவியல் அலட்சியம், 5 பேர் போலி ஆவணங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →