நகைச்சுவையால் நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்கியவர் ஸ்ரீவஸ்தவா: மோடி
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவரின் மறைவுக்கு திரையுலகினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,
Advertisement
தனது நகைச்சுவையால் பலரைக் கவர்ந்தவர் என்ற முத்திரையைப் பதித்தவர் ஸ்ரீவஸ்தவா. இவர் 40 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிரிப்பு, நகைச்சுவை மூலம் நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்கியவர் ஸ்ரீவஸ்தவா.
அவர் மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்து செல்கிறார். ஆனால் அவரின் நகைச்சுவையால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார்.
அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி!
என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.