இந்தியா

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைப்போம்: தெலங்கானா முதல்வர்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாரதீய ராஷ்டிரிய சமிதி மத்தியில் ஆட்சியமைக்கும் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

DIN

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாரதீய ராஷ்டிரிய சமிதி மத்தியில் ஆட்சியமைக்கும் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

பாரதீய ராஷ்டிரிய சமிதி ஆட்சியமைத்தவுடன் நாடு முழுவதும் தலித் பந்து திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரின் 125 அடி உயர சிலையை திறந்து வைத்து பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: பிஆர்எஸ் கட்சிக்கு மகாராஷ்டிராவில் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. அதே ஆதரவினை மேற்கு வங்கம், பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்தும் எதிர்பார்க்கிறோம். நான் உங்களுக்கு சில விஷயங்களை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நமது அரசு தான் அமையப் போகிறது. நம்முடைய எதிரிகள் சிலரால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியாது. ஒரு பெரிய அளவிலான தீயினை உருவாக்க ஒரு துளி நெருப்பு போதுமானது என்றார்.

முன்னதாக, அம்பேத்கர் பிறந்த தினமான இன்று அவரது மிகப் பெரிய பிராம்மாண்ட சிலையினை திறந்து வைத்தார். 

இந்த பிரம்மாண்ட அம்பேத்கர் சிலை 125 அடி உயரமுடையது. இந்த சிலை வெண்கலம் மற்றும் துருப்பிடிக்காத இரும்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ரூ.146.50 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அம்பேத்கர் சிலையினைத் திறந்து வைக்க இந்த நிகழ்வில் அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT