நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பை விட இன்றைய கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
சனிக்கிழமை நேற்று (ஏப்.15) 1,386 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 5 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. எனினும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,720- ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,091 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக தில்லியில் 6 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 4 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர், குஜராத், ஹிமாசல், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
மத்திய சுகாதாரத் துறை தரவுகளின்படி 4.42 கோடி பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.