கோப்புப் படம் 
இந்தியா

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை காசர்கோடு வரை நீட்டிப்பு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பிரதமர் நரேந்திர மோடியால் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கப்படும் கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காசர்கோடு வரை செல்லும் என்றார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

DIN

பிரதமர் நரேந்திர மோடியால் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கப்படும் கேரளாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காசர்கோடு வரை செல்லும் என்றார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். மத்திய இணையமைச்சர் வி.முரளீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முதலில் இந்த ரயிலை திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே இயக்க திட்டமிடப்பட்டது. 

செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், கேரளாவில் இரண்டு கட்டங்களாக தண்டவாளங்களை மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான முழு பாதையையும் மணிக்கு 110 கி.மீ வேகத்திற்கு மாற்ற ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். இரண்டாம் கட்டமாக வளைவுகளை நேராக்குதல் உள்ளடக்கிய மாற்றங்கள் செய்து முடிக்க இரண்டு முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகும். அதன் பிறகே, வேக திறன் மணிக்கு 130 கி.மீ ஆக அதிகரிக்கப்படும்.

தற்போது கேரளாவுக்கு ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் பல வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT