இந்தியா

கேரளத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

DIN


கொச்சி: கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயில், திருவனந்தபுரம் - கன்னூர் இடையே வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.

திங்கள்கிழமை காலை 5.10 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் கன்னூர் ரயில் நிலையத்தை 12.30க்கு வந்தடைந்தது.

கேரள மாநிலத்துக்கு இந்த ஆண்டின் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் வந்தே பாரத் ரயிலை பரிசளித்திருப்பதாக மத்திய வெளியுறவு விவகாரத் துறை இணை அமைச்சர் முரளிதரன் அறிவித்திருந்தார்.

கேரளத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த அறிவிப்பின் மூலம் பூர்த்தியாகியிருக்கிறது. இந்த மாத இறுதியில் கேரள மாநிலத்துக்கு வருகைதரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கவிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT