முகப்பு
இந்தியா

நாட்டில் 12 ஆயிரத்தை கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 12,591 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 12,591 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று 10,542 பேர் கரோனா உறுதியான நிலையில் இன்று 12,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 63,562லிருந்து 65,286-ஆக அதிகரித்துள்ளது.  கரோனாவுக்கு மேலும் 40 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,31,190-லிருந்து 5,31,230-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,4845,401-லிருந்து 4,48,57,992-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 8,175 பேர் குணமடைந்த நிலையில், இன்று 10,827பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.