முகப்பு
இந்தியா

மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.400 கோடியை விடுவித்த தில்லி அரசு

எம்.சி.டி(தில்லி மாநகராட்சி) நடத்தும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக தில்லி அரசு ரூ.400 கோடியை விடுவித்தது என்றார் கல்வி அமைச்சர் அதிஷி.

Updated On : 20 ஏப்ரல், 2023 at 9:45 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:20 AM

புதுதில்லி:  எம்.சி.டி(தில்லி மாநகராட்சி) நடத்தும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக தில்லி அரசு ரூ.400 கோடியை விடுவித்தது என்றார் கல்வி அமைச்சர் அதிஷி.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அதிஷி தெரிவித்ததாவது:

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் நோக்கம் தில்லி மாநகராட்சி நடத்தும் பள்ளிகளை மேம்படுத்துவதாகும். 

Advertisement

தற்போது தில்லி மாநகராட்சி பள்ளிகளில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்விக்கு தில்லி அரசு எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது. அதே வேளையில் பட்ஜெட்டில் பெரும்பகுதியை கல்விக்காக ஒதுக்கியுள்ளது. மாநகராட்சி பள்ளிகளை சிறந்ததாக மாற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம் என்ற நிலையில், முதல் தவணையாக ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் கூறுகையில், ஆம் ஆத்மி அரசு எப்போதும் கல்வியில் கவனம் செலுத்துகிறது, டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் சித்தாந்தங்களைப் பின்பற்றுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.