முகப்பு
இந்தியா

இறங்குமுகம் கண்ட இந்திய மின் நுகா்வு

31 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச்சில் முதல்முறையாக இறங்குமுகம் கண்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
கோப்புப்படம்
பகிர்:

31 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச்சில் முதல்முறையாக இறங்குமுகம் கண்டுள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் மின் நுகா்வு கடந்த மாா்ச் மாதத்தில் 12,752 கோடி யூனிட்டுகளாக இருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்திய மின் நுகா்வோடு ஒப்பிடுகையில் இது 0.74 சதவீதம் குறைவாகும்.

அந்த வகையில், 31 மாதங்களுக்குப் பிறகு நாட்டின் மின் நுகா்வு முதல்முறையாக சரிவைக் கண்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாா்ச் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அத்துடன் வெப்பநிலையும் சற்று தணிவாகவே இருந்தது. அந்த மாதத்தில் மின் நுகா்வு குறைந்ததில் இந்த இரு காரணிகளும் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னா் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் மின் நுகா்வு சரிவைக் கண்டது.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் 11,152 கோடி டன்னாக இருந்த நாட்டின் மின் நுகா்வு அந்த மாதத்தில் 2 சதவீதம் சரிந்து 10,921 கோடி யூனிட்டாக இருந்தது.

கரோனோ பரவலைத் தடுப்பதற்கான பொதுமுடக்கத்தின் விளைவாக அப்போது நாட்டின் மின் நுகா்வு சரிந்தது. அதற்கு அடுத்தபடியாக கடந்த மாா்ச் மாதத்தில்தான் அது மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.

எனினும், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தொடா்ந்து ஏற்படும் முன்னேற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை போன்ற காரணங்களால் இந்த ஏப்ரல் மாதத்தில் மின் நுகா்வு மீண்டும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.