முகப்பு
இந்தியா

தில்லியில் கரோனா கட்டுக்குள் உள்ளது: சுகாதார அமைச்சர்

தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார். 

Updated On : 21 ஏப்ரல், 2023 at 3:44 PM
பகிர்:

தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும், வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

தேசிய தலைநகரில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும், கரோனா தொடர்பான இறப்புகளில் பெரும்பாலானவை இணை நோய்களால் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். 

Advertisement

தலைநகரில் வியாழக்கிழமை நிலவரப்படி 1,603 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. 26.75 சதவீத விகிதத்துடன் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாக நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதிய இறப்புகளுடன், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 26,581 ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் உள்ள 7,976 கரோனா படுக்கைகளில், 390 மட்டும் ஆக்கிரமித்துள்ளதாக சுகாதாரத்துறை தரவு தெரிவிக்கின்றது. 

சுகாதாரத்துறை கூறுகையில், 
சமீப காலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தலைநகரில் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இனிவரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளது. 

கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட தில்லி அரசு தயார் நிலையில் உள்ளதாகவும், கரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகள் அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இணை நோய்கள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் எச்சரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.