15 நாள்களில் 15 பேர் பலி: கர்நாடகத்தில் மெல்ல அதிகரிக்கும் கரோனா!
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 537 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 537 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி,
மாநிலத்தில் கடந்த 15 நாள்களில் 15 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கரோனா நிலைமை தீவிரமாக மாறி வருவதால் மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,027 ஆக உள்ளது. இதன்படி நேர்மறை விகிதம் 3.06 சதவீதமாக உள்ளது.
பெங்களூருவில் 367 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 360 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,337 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மைசூரு (18), பெலகாவி (14), விஜயநகர் (12), தாவணகெரே (12), பல்லாரி (10) மாவட்டங்களில் சுகாதாரத் துறை உஷார் நிலையில் உள்ளது. மேலும் ஆறு மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஒற்றை இலக்கத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளன.