இந்தியா

2 நாட்களில் 7 நகரங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

DIN

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள்(ஏப்.24) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடி 36 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5,000 கிலோமீட்டர் தொலைவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். புது தில்லி, மத்தியப் பிரதேசம், கேரளம், சில்வாசா, டாமன் உள்பட 7 நகரங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கோள்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணம் தில்லியில் இருந்து தொடங்குகிறது. பிரதமர் முதலில் மத்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து அவர் தெற்கில் உள்ள கேரளாவுக்குச் செல்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் சூரத் வழியாக சில்வாசாவுக்குச் சென்று பின்னர் டாமன் சென்று, இறுதியில் தில்லிக்குத் திரும்புவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது, பிரதமர் 8 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்தியாவில் 7 வெவ்வேறு நகரங்களுக்கு பயணம் செய்யவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் கபடி வீரா் பலி: இருவா் காயம்

கனமழை எச்சரிக்கை: சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம்

அந்தோணியாா் திருத்தலம் 75-ஆவது ஆண்டு விழா

கோவை வழியாக இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு எஸ்பி சான்றிதழ்

SCROLL FOR NEXT