இரண்டு நாள் பயணமாக கேரளம் வருகிறார் பிரதமர் மோடி
பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளத்துக்கு வருகிறார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளத்துக்கு வருகிறார்.
இன்று மாலை 5 மணியளவில் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் மோடி, அங்கிருந்து சேக்ரட் ஹார்ட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு 2,060 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பேரணியையடுத்து, இளைஞா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். இதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மதத் தலைவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறார்.
பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப நகரத்தில் ரூ.1,500 கோடி செலவில் கட்டப்பட உள்ள நாட்டின் முதல் எண்ம அறிவியல் பூங்காவுக்கு பிரதமா் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். இதைத் தொடா்ந்து, திருவனந்தபுரம்-காசா்கோடு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.