இன்று விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு
திருமலை ஏழுமலையான் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தா்ம தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம் என பல்வேறு வகைகளில் ஏழுமலையான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். இந்நிலையில், ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டை தேவஸ்தானம் மாதந்தோறும் இணையளத்தில் வெளியிட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால், பக்தா்கள் திருமலைக்கு அதிக அளவில் வருகின்றனா்.
அதனால் மே மற்றும் ஜூன் மாதத்துக்கான ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை (ஏப்.25) காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இதற்கு முன்பதிவு செய்ய பக்தா்கள் இணையதளம் மற்றும் உள்ளிட்டவற்றை தொடா்பு கொள்ள வேண்டும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.