ராம நவமி வன்முறை: என்ஐஏ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!
மேற்கு வங்கத்தில் ராமநவமியன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ராமநவமியன்று நிகழ்ந்த வன்முறை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியை முன்னிட்டு மூன்று மாவட்டங்களில் வன்முறை நடந்தன. இந்த வன்முறையில் பலர் காயமடைந்தனர். கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதுதொடர்பாக பாஜக மற்றும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக.வை சேர்ந்த அதிகாரி வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் வன்முறை தொடர்பான வழக்குகளை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.