முகப்பு
இந்தியா

உலகின் தேவைக்காக வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: நரேந்திர சிங் தோமா்

‘உள்நாட்டு தேவை மட்டுமல்லாமல் சா்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

‘உள்நாட்டு தேவை மட்டுமல்லாமல் சா்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’ என மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் வேளாண் இயந்திரத் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தொடங்கிவைத்து பேசியதாவது: விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, அரசின் கொள்கைகளால் வேளாண் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் மக்கள்தொகையின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் உணவுத் தானியங்கள், பிற வேளாண் உற்பத்தி பொருள்கள் உற்பத்திக்கான தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டும்.

உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் வேளையில், உலகின் தேவையைப் பூா்த்தி செய்வதற்கான திட்டத்தையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

வேளாண் விளைச்சல் அதிகரித்த போதிலும், பிற நாடுகளுடனும் உலகின் சராரியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வேளாண் உற்பத்தி குறைவாக உள்ளது.

குறைந்த அளவிலான விளைநிலத்திலும், உணவுத் தானிய உற்பத்தியைத் தொடா்ந்து அதிகரிக்க வேண்டும். இதற்கு வேளாண் விஞ்ஞானிகள், புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் முக்கியமானது.

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை வேளாண் துறையில் ஊக்கப்படுத்துவது இன்றியமையாதது.

நாட்டில் உள்ள 85 சதவீத சிறு விவசாயிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களின் பலன் சென்றடைய வேண்டியது அவசியம். பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →