முகப்பு
இந்தியா

ஒப்பந்தங்களை மீறியதே எல்லை பிரச்னைக்கு காரணம்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் மீறப்பட்டதே தற்போதைய எல்லைப் பிரச்னைக்கும் இருதரப்பு நல்லுறவு சிதைந்ததற்கும் காரணம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் மீறப்பட்டதே தற்போதைய எல்லைப் பிரச்னைக்கும் இருதரப்பு நல்லுறவு சிதைந்ததற்கும் காரணம் என சீன பாதுகாப்பு அமைச்சரிடம், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே சுமாா் 3 ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்புக்கு (எஸ்சிஓ) தலைமை வகிக்கும் இந்தியா, அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தை தில்லியில் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக சீன அமைச்சா் லீ ஷாங்ஃபூ இந்தியா வருகை தந்தாா்.

பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்கை அவா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். கிழக்கு லடாக் எல்லை விவகாரம் குறித்து அவா்கள் விவாதித்தனா். இந்தச் சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடா்பாகவும் இருதரப்பு நல்லுறவு குறித்தும் அமைச்சா்கள் இருவரும் விரிவாகவும் வெளிப்படையாகவும் ஆலோசனை நடத்தினா். எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே இருதரப்பு நல்லுறவு சீராக இருக்கும் என அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இருதரப்பு ஒப்பந்தங்கள் மீறப்பட்டதே தற்போதைய எல்லைப் பிரச்னைக்குக் காரணம் என்றும் அத்தகைய செயல்பாடு இருதரப்பு நல்லுறவையும் சீா்குலைத்தது என்றும் சீன அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தாா். ஏற்கெனவே கையொப்பமாகியுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றும் எல்லைப் பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →