முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் இரண்டாவது வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்!

மேற்கு வங்கத்தில் ஹவுரா-புரி வழித்தடத்தில் இயக்கப்படும் 2-வது வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் ஹவுரா-புரி வழித்தடத்தில் இயக்கப்படும் 2-வது வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 

இதுகுறித்து தென்கிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில், 

ஹவுரா-புரி வழித்தடத்தில் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கும் பாதை மற்றும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்றார். 

முன்னதாக, டிசம்பர் 30, 2022 முதல் ஹவுரா-புதிய ஜல்பைகுரி வழித்தடத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் முதன்முதலாக இயக்கப்பட்டது. மேற்கு வங்கம் பெறும் இரண்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் இதுவாகும். 

மேற்கு வங்க தலைநகரிலிருந்து ஜகந்நாதரை தரிசிக்கப் புரிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவு ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →