கோப்புப்படம் 
இந்தியா

போலீஸ் காவலில் மரணம்: குஜராத், மகாராஷ்டிரத்தில் அதிகம்

போலீஸ் காவலில் இருப்பவா்கள் மரணமடைவது குஜராத், மகாராஷ்டிரத்தில் அதிகமாக உள்ளது என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

DIN

போலீஸ் காவலில் இருப்பவா்கள் மரணமடைவது குஜராத், மகாராஷ்டிரத்தில் அதிகமாக உள்ளது என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

2018 ஏப்ரல் 1 முதல் 2023 மாா்ச் 31 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் காவலில் 687 போ் உயிரிழந்தனா். இதில் அதிகபட்சமாக குஜராத்தில் 81, மகாராஷ்டிரத்தில் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் 50, பிகாரில் 47, உத்தர பிரதேசத்தில் 41, தமிழ்நாட்டில் 36 பேரும் போலீஸ் காவலில் உயிரிழந்துவிட்டனா்.

நாடு முழுவதும் 2022-23-இல் 164, 2021-22-இல் 175, 2020-21-இல் 100, 2019-20-இல் 112, 2018-19-இல் 136 போ் போலீஸ் காவலில் உயிரிழந்தனா். தேசிய மனித உரிமைகள் ஆணைய புள்ளி விவரத்தில் இருந்து இத்தகவல் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT