முகப்பு
இந்தியா

நாடு வளர்ச்சியடைய தரமான கல்வி அவசியம்: கேஜரிவால்

தில்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
பகிர்:

தில்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

சங்கம் விஹாரின், தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் பேசிய அவர், 

நாடு வளர்ச்சியடைய, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டியது அவசியம்.

டாக்டர் அம்பேத்கர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், வெளிநாட்டில் சிறந்த கல்வியை கற்றவர்.  ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைத்தால் மட்டுமே நாடு முன்னேறும் என்று அவர் கூறியுள்ளார். 

தலைநகரில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று புதிய அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், பல ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். 

கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னையும் விரைவில் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →