ஜம்மு-காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராமுல்லாவின், அசாத்கஞ்ச் பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை போலீஸார், ராணுவம், சிஆர்பிஎப் ஆகியோர் சுற்றி வளைத்தனர்.
இந்நிலையில், லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள், துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் பாராமுல்லாவில் வசிக்கும் பைசல் மஜீத் கணி மற்றும் பழைய பாராமுல்லாவில் வசிக்கும் நூருல் கம்ரான்கணி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தைக் கருத்தில் கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.