முகப்பு
இந்தியா

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர்
பகிர்:

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தனர். 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். 

தொடர் அமளி காரணமாக மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.