பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு?
சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கட்சித் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் விஜய் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் விஜய் சமர்ப்பித்த வேட்புமனுவில் குளறுபடி இருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தேர்தல் விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளரின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைப்பது அல்லது தவறான தகவல்களை அளிப்பது தண்டனைக்குரிய செயல் மட்டுமின்றி, அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
விஜய் முதலில் சமர்ப்பித்த பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில், தன் மீது எந்த வழக்கும் இல்லை எனக் குறிப்பிட்ட்டுள்ளார். ஆனால், திருச்சி கிழக்கில் சமர்ப்பித்த வேட்புமனுவில், 2025-ல் பதிவுசெய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் சமர்ப்பித்துள்ள வேட்புமனுக்களில் இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பது, அவரின் வேட்புமனுவை நிராகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும்.
இருப்பினும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் (ஏப். 6) இன்னும் முடிவடையாததால், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் மூலம் வேட்புமனு நிராகரிப்பிலிருந்து விஜய் தப்பிக்க முடியும்.
வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 7 ஆம் தேதியில், விஜய்யின் வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது இறுதி செய்யப்படும்.
TN Polls 2026: Possibility of TVK Cheif Vijay's Nomination Being Rejected in Perambur Constituency?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.