சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாள் இன்று. எனவே, நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 4.15 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். குகைக் கோயிலுக்குச் செல்லும் புனித பயணம் ஆகஸ்ட் 1-ம் தேதியோடு நிறைவடைகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.