படம்: நன்றி ஏஎன்ஐ 
இந்தியா

பாஜக எம்பிக்கு 2 ஆண்டுகள் சிறை: தகுதிநீக்கம் செய்யப்படுவாரா?

டோரண்ட் பவர் நிறுவன அதிகாரியை தாக்கிய வழக்கில் உத்தர பிரதேச பாஜக எம்.பி.ராம் சங்கர் கத்தேரியாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

DIN

டோரண்ட் பவர் நிறுவன அதிகாரியை தாக்கிய வழக்கில் உத்தர பிரதேச பாஜக எம்.பி.ராம் சங்கர் கத்தேரியாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக 2011ஆம் ஆண்டு டோரண்ட் பவர் நிறுவன அதிகாரியை தாக்கியதாக ராம் சங்கர் கத்தேரியா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில், ராம் சங்கர் கத்தேரியா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.50,000/- அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்பி, எம்எல்ஏக்கள் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்குப் பின் மேலும் 6 ஆண்டுகள் என மொத்த 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 

இந்நிலையில், ராம் சங்கர் கத்தேரியாவும் எம்.பி. பதவியில் இருந்து விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை தற்போது நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

மின்சார உதிரிப் பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூடல்:ஊழியர்கள் டவர் மீது ஏறிப் போராட்டம்!

SCROLL FOR NEXT