நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான்-3
நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் சென்றுள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
நிலவின் வட்டப்பாதையில் சந்திரயான் - 3 விண்கலம் சென்றுள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
நிலவை ஆராயச் சென்ற சந்திராயன் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 20 நாட்களாக பூமியிலிருந்து நிலவை நோக்கி 3.84 லட்சம் கி.மீ தூரம் விண்கலம் பயணித்துள்ளது. தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன் - 3 விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசையால் இயக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 19 நாள்கள் மிக முக்கியமானமவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.