முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: சம்பா பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு செயலிழப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில், துருப்பிடித்த எறிகுண்டு ஒன்று பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக செயலிழக்க வைக்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:05 PM
சம்பா பகுதியில் துருப்பிடித்த எரிகுண்டு செயலிழப்பு
பகிர்:


சம்பா: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில், துருப்பிடித்த எரிகுண்டு ஒன்று பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக செயலிழக்க வைக்கப்பட்டது.

மிகவும் சக்திவாய்ந்த, மோர்ட்டர் ஷெல் எனப்படும் எரிகுண்டு சம்பா  - உதம்பூர் சாலையோரம் இருந்ததை, நத் கிராம மக்கள் பார்த்து தகவல் அளித்தனர்.

உடனடியாக அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக எரிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

இந்த எரிகுண்டு, அந்த கிராமத்துக்கு அருகே ஓடும் ஆற்றங்கரையோரம் இருந்திருக்கலாம் என்றும், அங்கு நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளின்போது, தொழிலாளர்கள் சில டிராக்டர்களில் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது இந்த குண்டு சாலையோரம் வீழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.