இந்தியா

சிறுமியை கடத்தி 28 நாள்களாக பாலியல் வன்கொடுமை: பிகாரில் அதிர்ச்சி! 

பிகாரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு 28 நாள்களாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பிகாரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு 28 நாள்களாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சரய்யா காவல் நிலையத்திற்குள்பட்ட சிஸ்வானியா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஜூலை 9-ம் தேதி காரில் கடத்தப்பட்டதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீஸார் காணாமல் போன சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனிடையே, ஆகஸ்ட் 5-ம் தேதி சிறுமியை சரய்யா சௌக்கிற்கு வந்து அழைத்துச் செல்லும்படி கடத்திச்சென்றவரிடம் இருந்து அவரது தாய்க்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, கைவிடப்பட்டு மயங்கிய நிலையிலிருந்த தன் மகளை வீட்டிற்கு அழைத்துவந்து, சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து காவல்துறை கூறியது, 

ஜூலை 9-ல் கடத்தப்பட்ட சிறுமி, அறியப்படாத ஓர் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, ஆறு பேர் கொண்ட கும்பலால் 28 நாள்கள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

ஐபிசி பிரிவு 366ஏ மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதியின் முன்பு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களை சிறுமி அளித்துள்ளார். அவர்களைப் பிடிக்கத் தொடர்ந்து தேடுதல் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக முசாபர்பூர் நகர காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

உலகம் எல்லா உயிா்களுக்குமானது என்பதை மனிதா்கள் உணர வேண்டும்: கவிதா ஜவகா்

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

SCROLL FOR NEXT