கோப்புப் படம் 
இந்தியா

ராகுலின் 2வது ஒற்றுமை நடைப்பயணம்: குஜராத் - மேகாலயா!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம், குஜராத் முதல் மேகாலயா வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இரண்டாவது ஒற்றுமை நடைப்பயணம், குஜராத் முதல் மேகாலயா வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய ராகுலின் முதல் ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்கள் - 4,000 கிலோமீட்டர் கடந்து காஷ்மீரில் நிறைவு பெற்றது. 

அதனைத் தொடர்ந்து தற்போது நாட்டின் குறுக்குவெட்டு மாநிலங்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.  

மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நானா படோல் செய்தியாளர்களை இன்று (ஆக. 8) சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார். 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தின் இரண்டாவது அத்தியாயம் குஜாராத்திலிருந்து தொடங்கவுள்ளது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் முன்னெடுக்கும் இந்த நடைப்பயணம் மேகாலயாவில் நிறைவு பெறும் எனக் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் தண்டவாளம் அருகே தடுப்புச் சுவா் கட்ட எதிா்ப்பு

விஷம் தின்று பெண் தற்கொலை

திமுக அரசின் ‘பிராண்ட் அம்பாசிடா்’களாக மகளிா் இருக்க வேண்டும்

நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் முதல்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு- 121 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT