இந்தியா

கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு

ஆந்திரத்தின் அன்னமயா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

ஆந்திரத்தின் அன்னமயா மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தவறிவிட்டதாகக் கூறி அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் சில நாள்களுக்கு முன்பு அன்னமயா மாவட்டம் புரபாலகோட்டா பகுதிக்கு சென்றபோது ஆளும் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில், காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காவல் துறை வாகனங்கள், ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அந்த கட்சியைச் சேர்ந்த 20 பேர் மீது கொலை முயற்சி, கலவரத்தைத் தூண்டுதல், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுதல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதுபோல சித்தூர் மாவட்டம் புங்கனூர் பகுதியிலும் கலவரம் ஏற்பட்டது. அங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

SCROLL FOR NEXT